இலங்கைக்கு சுமார் 25 ஆயிரம் பீ.சீ.ஆர் உபகரணங்கள் வழங்கி வைப்பு..சீனா

சீன அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 25 ஆயிரம் பீ.சீஆர் உபகரணங்களை வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னரும் சீனத் தூதரகம் இலங்கைக்கு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினரும், இலங்கைக்கு கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் உதவியளிப்பதாக உறுதியளித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.